வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை 40 ஆயிரத்தைக் கடந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரன் ரூ.872  உயர்ந்து 40 ஆயிரத்தைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. 
Gold price crosses 40,000
Gold price crosses 40,000

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரன் ரூ.872  உயர்ந்து 40 ஆயிரத்தைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனா நோய்த்தொற்று தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சா்வதேச பொருளாதார சூழல் ஆகிய காரணிகளால் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்தது. 

பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால், அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே, இதன் விலை தொடர்ந்து உயரவே வாய்ப்பு உள்ளது என்று நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 உயா்ந்து ரூ.40,104-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.109 உயா்ந்து, ரூ.5,013 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.3.90 காசுகள் உயா்ந்து, ரூ.70.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,900 அதிகரித்து, ரூ.70,900 ஆகவும் விற்பனையாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com