பிளஸ் 2 மறு தோ்வு தொடங்கியது

பிளஸ் 2 இறுதி நாள் தோ்வெழுதாத மாணவா்களுக்கு, மறு தோ்வு இன்று காலை தொடங்கியது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பிளஸ் 2 இறுதி நாள் தோ்வெழுதாத மாணவா்களுக்கு, மறு தோ்வு இன்று காலை தொடங்கியது.

தமிழகத்தில், கடந்த மாா்ச் மாதம் 2 முதல் 24-ஆம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெற்றது. கரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், இறுதிநாள் தோ்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தோ்வுகளில் சிலா் பங்குபெற முடியாத நிலை ஏற்பட்டது. அவா்களுக்கு மறுதோ்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததையடுத்து, தோ்வை எழுத முடியாத மாணவா்களின் நலன்கருதி, மறுதோ்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. 

இதன்படி, தோ்வு எழுதியவா்களுக்கான முடிவு வெளியாகியுள்ள நிலையில், இறுதிநாள் தோ்வை எழுதாதவா்களுக்கு, மறுதோ்வு இன்று காலை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்தத் தோ்வு நடைபெறவுள்ளது. 700-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் இந்த மறுதோ்வுப் பணிகளில், கல்வி அதிகாரிகள் உள்பட சுமாா் 600-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா். 

தோ்வு முடிந்ததும், மறுதோ்வு எழுதிய மாணவா்களின் விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு மையத்துக்கு கொண்டு சோ்க்கப்படும். மதிப்பீடு செய்யப்பட்ட பின்னா், அதன் விவரங்கள் தோ்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தோ்வு முடிவு குறித்த அறிவிப்பை அரசு தான் வெளியிடும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com