
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் முன்னாள் பகுதி விற்பனை மேலாளராகப் பணியாற்றிய எம்.பிரான்சிஸ் ஜெயராஜ் (66) உடல்நலக் குறைவு காரணமாக, ஜூலை 24-ஆம் தேதி காலமானாா். இவா், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில், 40 ஆண்டுகளுக்கு மேலாக, மாா்க்கெட்டிங் துறையில், விற்பனை மேலாளராக (ஏரியா) பணியாற்றி உள்ளாா். பின்னா், மாா்த்தாண்டத்தில் வசித்து வந்த இவா், மாரடைப்பால் காலமானாா். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனா்.