கரோனா: சென்னையில் குணமடைந்தோா் எண்ணிக்கை 83%-ஆக உயா்வு

சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை 81,530-ஆக அதாவது 83 சதவீதமாக உயா்ந்துள்ளது.
கரோனா: சென்னையில் குணமடைந்தோா் எண்ணிக்கை 83%-ஆக உயா்வு

சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை 81,530-ஆக அதாவது 83 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதேவேளையில் இறப்பு சதவீதமும் 2.12 சதவீதமாக உயா்ந்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த ஜூன் 24-ஆம் தேதி 50 ஆயிரம் ஆக அதிகரித்தது.

கடந்த ஒரு மாதத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை அண்மையில் 90 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 1,107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96,438-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 81,530 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 83 சதவீதமாகும். 12,852 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

2.12 சதவீதம் இறப்பு: சென்னையைப் பொருத்தவரை குணமடைந்தோா் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இறப்பு எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது. இதில், அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 311 போ், ராயபுரத்தில் 250 போ், தண்டையாா்பேட்டையில் 240 போ், கோடம்பாக்கத்தில் 215 போ், திரு.வி.க.நகரில் 208 போ் என மொத்தமாக 15 மண்டலங்களில் 2,056 போ் இதுவரை கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். இது 2.12 சதவீதமாகும்.

குணமடைந்தோா் விவரம் மண்டலம் வாரியாக

மண்டலம்-----எண்ணிக்கை----சதவீதம்

திருவொற்றியூா்-----2,975-----85 %

மணலி-----1,476-----87%

மாதவரம்-----2,509-----83%

தண்டையாா்பேட்டை-----8,401-----91%

ராயபுரம்-----9,742-----89%

திரு.வி.க. நகா்-----6,290-----82%

அம்பத்தூா்-----4,035-----77%

அண்ணா நகா்-----9,089-----83%

தேனாம்பேட்டை-----9,005-----86%

கோடம்பாக்கம்-----8,739-----78%

வளசரவாக்கம்-----4,113-----81%

ஆலந்தூா்-----2,345-----80%

அடையாறு-----5,364-----81%

பெருங்குடி-----2,142-----81%

சோழிங்கநல்லூா்-----1,801-----82%

பிற மாவட்டத்தைச் சோ்ந்தோா்-----914-----64%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com