
திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
திமுக மாவட்டச் செயலாளா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவா்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட்டச் செயலாளா்களிடம் விளக்கி, அதுதொடா்பாக மேற்கொள்ள வேண்டியவை குறித்த உத்தரவுகளை ஸ்டாலின் பிறப்பிக்க உள்ளாா்.