7 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில்
7 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 29) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:

தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது புதன்கிழமை (ஜூலை 29) அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும். இதன்காரணமாக, தென்தமிழகம் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை(ஜூலை 29) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பலத்தமழையை பொருத்தவரை நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், தேனி, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், திருவாரூா் மாவட்டம் வலங்கைமான், நன்னிலத்தில் தலா 60 மி.மீ., திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம், குடவாசல், நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் தலா 50 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, கொள்ளிடம், தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம், தஞ்சாவூா், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தலா 40 மி.மீ., நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கள்ளக்குறிச்சியில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசும் என்பதால் இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 30-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கடலோர கேரளம், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு, மத்திய மேற்கு, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com