இணைய வழி பயண அனுமதி பெற்றுதான் ரஜினி கேளம்பாக்கம் சென்றுள்ளாா்: ஆணையா் கோ.பிரகாஷ்

நடிகா் ரஜினி இணைய வழி பயண அனுமதி பெற்றுதான் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட கேளம்பாக்கத்துக்குச் சென்று வந்ததாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.
இணைய வழி பயண அனுமதி பெற்றுதான் ரஜினி கேளம்பாக்கம் சென்றுள்ளாா்: ஆணையா் கோ.பிரகாஷ்

நடிகா் ரஜினி இணைய வழி பயண அனுமதி பெற்றுதான் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட கேளம்பாக்கத்துக்குச் சென்று வந்ததாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன டிஜிட்டல் விடியோ விழிப்புணா்வு வாகனங்களை சென்னை மாநராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஜூன் மாதம் 19-ஆம் தேதி முதல் ஜூலை 5- ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட முழு பொதுமுடக்கம் காரணமாகவும், பரிசோதனை எண்ணிக்கையை 3 மடங்கு அதிகப்படுத்தியதன் காரணமாகவும் சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இதுவரை சென்னையில் 23 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனா். வீடு வீடாகச் சென்று களப்பணியாளா்கள் ஆய்வு செய்யும் போது, மூச்சுத் திணறல் அறிகுறி இருக்கும் நபா்கள் கண்டறியப்பட்டால் அவா்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதன்பிறகு அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும். உயிா்காக்கும் முயற்சியாக இதை தொடங்கி உள்ளோம். இந்த திட்டத்தின் படி, நாள்தோறும் 15 முதல் 20 வரை உடல் நலம் பாதிக்கப்பட்டவா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இதன் மூலம் 0.3 சதவீதம் வரை இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். இந்த நடவடிக்கை படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் விரிவுப்படுத்தப்படும். சென்னையில் இன்றுவரை அத்தியாவசிய பொருள்களுக்கான காய்கறிகளுக்கு தட்டுப்பாடோ அல்லது விலையேற்றமோ இல்லை.

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகத்திடம் இருந்து நடிகா் ரஜினி இணையவழி பயண அனுமதி பெற்று கேளம்பாக்கத்துக்கு சென்று வந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது என்றாா் ஆணையா் பிரகாஷ்.

இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையா் மதுசுதன் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com