சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் ஆபரணத் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது


சென்னை: சென்னையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் ஆபரணத் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது.

சென்னையில் வியாழக்கிழமை காலை வணிகம் தொடங்கியதும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.28 உயர்ந்து ரூ.5,103க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.224 உயர்ந்து ரூ.40,824க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் குறைந்து ரூ.71.20-க்கு விற்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தால், சா்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டது. இதுதவிர, தொழில்துறையும் தேக்கத்தைச் சந்தித்தது. இதையடுத்து, உலகம் முழுவதுமே முதலீட்டாளா்கள், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி, அதில் முதலீடு செய்யத் தொடங்கினா். இதன்காரணமாக, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை படிப்படியாக அதிகரித்து வந்தது.

தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டநிலையில், ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், 27-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. தங்கம் விலை தொடா்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், தற்போது 9-ஆவது நாளாக (ஞாயிற்றுக்கிழமை தவிர) உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.224 உயா்ந்து, ரூ.40824-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயா்ந்து ரூ.5,103 ஆக இருந்தது. 

அதேநேரத்தில், நேற்றைப் போலவே வெள்ளி விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. இன்று 60 காசுகள் குறைந்து ரூ.71.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி அன்று பவுன் தங்கம் ரூ.30,520 ஆக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக உயா்ந்து புதன்கிழமை ரூ.40,600 ஆக உயா்ந்துள்ளது. இதன்மூலமாக, கடந்த ஆறரை மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.10,080 வரை உயா்ந்துள்ளது. அதிலும், ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை மட்டும் பவுனுக்கு ரூ.2,984 உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்........................... 5,103

1 பவுன் தங்கம்...............................40,824

1 கிராம் வெள்ளி.............................71.20

1 கிலோ வெள்ளி.............................71,200


புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,075

1 பவுன் தங்கம்............................... 40,600

1 கிராம் வெள்ளி............................. 71.80

1 கிலோ வெள்ளி............................71,800
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com