சிங்காரப்பேட்டை: ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்ட பூமிபூஜை 

சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது.
சமுதாயக்கூடம் கட்டும் பணியை ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
சமுதாயக்கூடம் கட்டும் பணியை ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு வியாழக்கிழமை பூமி பூஜை  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சேது ராமலிங்கம், தாட்கோ செயற்பொறியாளர் நாகராஜன், ஊத்தங்கரை வட்டாட்சியர் செந்தில்குமரன், ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் ஏ.சி. தேவேந்திரன், நிலவள வங்கி தலைவர் சாகுல் அமீது, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன் சிங்காரப்பேட்டை ஊராட்சிமன்ற தலைவர் அகமது பாஷா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெ. எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான சமுதாயக்கூடம் கட்டும் பணியை ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

இதில், நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி மத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சக்தி, எக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வேடி அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com