கரோனாவுக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை: அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனா பாதித்த நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்திருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரோனாவுக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை: அமைச்சர் விஜயபாஸ்கர்
கரோனாவுக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை: அமைச்சர் விஜயபாஸ்கர்


சென்னை: கரோனா பாதித்த நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்திருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் கரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கரோனாவுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கும் ஆயுர்வேத மருந்துகள் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில், ஆயுர்வேத கரோனா சிகிச்சை மையங்களில் விலையில்லாமல் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது, கரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளான இந்துகாந்த கசாயம், கடுக்காய் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அகஸ்திய ரசாயனம், கூஷ்மாண்ட ரசாயனம் வழங்க ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

கரோனா நோயாளிகள் காலை மற்றும் இரவு என இருவேளை இந்த மருந்துகளை சாப்பிட மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்தவரின் ஆலோசனைப்படி மருந்துகளை அருந்த வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com