வேலையில்லாத சோம்பேறிகளின் மனதில் சாத்தான் குடியிருப்பான்: சர்ச்சையில் குஷ்பு

வேலையில்லாத சோம்பேறிகளின் மனதில் சாத்தான் குடியிருப்பான் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார். 
வேலையில்லாத சோம்பேறிகளின் மனதில் சாத்தான் குடியிருப்பான்: சர்ச்சையில் குஷ்பு



வேலையில்லாத சோம்பேறிகளின் மனதில் சாத்தான் குடியிருப்பான் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார். 

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதை வரவேற்பதாக குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். புதிய கல்விக்கொள்கைக்கு காங்கிரஸ் கட்சி தேசிய தலைமை விமர்சித்து வரும் நிலையில் அந்த நிலைப்பாட்டிற்கு எதிராக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு பதிவிட்டிருக்கும் பதிவு பல சர்ச்சைகளை எற்படுத்தி உள்ளது. 

காங்கிரஸ் கட்சியை விட்டு குஷ்பு பாஜகவில் தஞ்சம் அடைய உள்ளதாக பலரும் பதிவிட்டனர். அவர்களுக்கு குஷ்பு டிவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில், புதிய கல்விக்கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது என்றும், அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் நான் உண்மையை தான் பேசுகிறேன். நாட்டின் குடிமகனாக எனது கருத்தை பதிவிட்டுள்ளேன்.

எந்தவொரு மசோதா அல்லது வரைவு குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும், தான் ஜனநாயகத்தை முழுமையாக நம்பும் ஒருவர் எனவும், கருத்து வேறுபாடு இருப்பது நல்லது என்று நினைப்பதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன் என்கிறார் குஷ்பு.

புதிய கல்வி கொள்கையில் சில இடங்களில் குறை இருப்பினும், இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன். எதிர்கட்சி என்பது நாட்டின் எதிர்காலத்திற்காக உழைப்பது. ஜனநாயகத்தில் காங்கிரஸ் வலுவான கட்சி அல்லவா? ஒன்றிணைந்து செயல்படுவதே அரசியல். இதனை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நான் பாஜகவில் இணைவேன் என்பதில் உண்மையில்லை. நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

ஒரு கட்சி என்று இருந்தால் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருக்கும். நம்முடைய நாடு பலதரப்பு மக்களால் ஆனது. மத நம்பிக்கைகள் கொண்டவர்களும் இருக்கிறார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள். நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர் என தெரிவித்துள்ள அவர், புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்க்கிறேன். நமது ஜனநாயகத்திற்காக, நமது மக்களுக்காக, மாணவர்களுக்காக, ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக, நமது தேசத்திற்காக ஒற்றுமையாக நிற்க வேண்டிய நேரம் இது. இப்போது நாம் அனைவரும் நமது உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரம் இது. 

என் வாதம் ஒன்றே.. எல்லோரும் பள்ளியில் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகளை ஏன் கண்டுபிடிக்கக்கூடாது? கல்வி கற்காததற்கு ஏன் ஒரு காரணம் சொல்ல வேண்டும்? எல்லோரும் பள்ளிக்குச் செல்வதை உறுதிசெய்ய போராடுகிறார்கள். கல்வி அவசியம், மொழி இரண்டாம் நிலை.

எதிர்க்கட்சி என்பது நாட்டின் எதிர்காலத்திற்காக உழைப்பதாகும் எனவும், அரசியல் என்பது சத்தம் போடுவது மட்டுமல்ல என  கூறியுள்ளார்.

சிலதை நினைத்து நான் சிரித்துவிட்டுதான் போக வேண்டும். சிலர் எதையாவது கற்பனை செய்து போட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு வேலையில்லாமல் எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வேலையில்லாத சோம்பேறிகளின் மனதில் சாத்தான் குடியிருப்பான் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என்று பல பதிவுகளை பதிவிட்டுள்ளார் குஷ்பு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com