நாகூர் தர்கா கந்தூரி விழா: சந்தன கட்டை வழங்குவதற்கான அரசாணையை அளித்தார் முதல்வர் 

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  இன்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நி
நாகூர் தர்கா கந்தூரி விழா: சந்தன கட்டை வழங்குவதற்கான அரசாணையை அளித்தார் முதல்வர்
நாகூர் தர்கா கந்தூரி விழா: சந்தன கட்டை வழங்குவதற்கான அரசாணையை அளித்தார் முதல்வர்


சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  இன்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாக குழு நிர்வாகி கே. அலாவுதீனிடம் (ஓய்வு)  வழங்கினார்.

இந்தியாவில் உள்ள புனித தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், இஸ்லாமிய புனித ஸ்தலங்களில் முக்கியமானதும், சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) திருவிழாவிற்கு விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 25.11.2012 அன்று அறிவித்தார். 

அந்த அறிவிப்பின்படி, 2013-ஆம் ஆண்டு முதல், நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு ஆண்டுதோறும் விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாக குழுவினரிடம் தமிழக முதல்வர்  இன்று வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com