தமிழகத்தில் பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் இல்லை: விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. வேளாண் அதிகாரிகள் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் இல்லை: விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. வேளாண் அதிகாரிகள் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்கம் எதுவும் இல்லை. இதனால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. விவசாய நிலங்களில் வழக்கமான பச்சைநிற வெட்டுக்கிளிகள் வறண்ட நிலப்பகுதிகளில் காணப்படும். இவைகள் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்கம் வராது என்றபோதிலும் கரோனா போல் அதுதொடர்பான தகவல் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக அது குறித்த தகவல் வழங்கப்படுகிறது.

முதல்வர் உத்தரவின்பேரில் அந்தந்த மாவட்டங்களில் வேளாண்துறை தீயணைப்புத்துறையினர் குழு அமைத்து பாலைவன வெட்டுக்கிளிகள் வந்தால் தீயணைப்பு வாகனம் மூலம் மருந்து உடனே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் நீங்கள் அச்சப்படத் தேவையில்லை.

காலிட் டப்பாவை தட்டி ஒலி எழுப்பியும், வேப்பம்புண்ணாக்கு கலந்த இயற்கை பூச்சி கொல்லி தெளித்தும் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த முடியும். எதிர்பாராமல் வெட்டுக்கிளிகள் வந்தால் மத்திய அரசிடம் மாலத்தியான் பூச்சிமருந்து பெறப்பட்டு ஒரே நேரத்தில் அழிக்கவும் அரசுத் துறையினர் தயாராக உள்ளனர். இது தொடர்பான அச்சம் தேவையில்லை என்பதற்காக இந்த ஆலோசனை வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை விளக்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com