பவானியில் காவிரி பாலங்கள் போக்குவரத்திற்குத் திறப்பு

ஈரோடு மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மார்ச் 22-ம் தேதி மூடப்பட்ட காவிரி பாலங்கள் 68 நாட்களுக்குப் பிறகு இன்று பொதுமக்கள் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.
பவானியில் காவிரி பாலங்கள் போக்குவரத்திற்குத் திறப்பு

ஈரோடு மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மார்ச் 22-ம் தேதி மூடப்பட்ட காவிரி பாலங்கள் 68 நாட்களுக்குப் பிறகு இன்று பொதுமக்கள் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 22ஆம் தேதி முழு முடக்கத்தை அறிவித்தது. அன்று மாலையே ஈரோடு காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சிவப்பு மண்டலங்களாக அறிவித்தும் உத்தரவிட்டது. இதனால், ஈரோடு மாவட்டத்தின் எல்லைகள் ஆங்காங்கே சீல் வைத்து மூடப்பட்டதோடு, வெளி மாவட்ட மக்கள் ஈரோட்டுக்குள் வருவதற்கும் ஈரோட்டிலிருந்து வெளியே செல்வதற்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

இதனால், ஈரோடு மாவட்டம் பவானியையும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய மற்றும் புதிய பாலங்கள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டன. பவானியும் குமாரபாளையமும்  வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்து என்றாலும் தொழில், வேலைவாய்ப்பு, உறவுகள் என அனைத்திலும் நெருக்கம் கொண்டவை.

இரு மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டதோடு, நடந்து செல்லவே முடியாத அளவுக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக காவிரி பாலத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழக அரசு தளர்வுகளை அறிவித்ததால் இன்று காலை முதல் புதிய மற்றும் பழைய பாலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்திற்குத் திறந்து விடப்பட்டது. மேலும் காவல்துறையின் சோதனைச் சாவடி அகற்றப்பட்டது. இதனால், அனைத்து வாகனங்களும் இரு மாவட்டங்களுக்கும்  எளிதில் சென்று வருவதால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com