தமிழகத்தில் ரூ.224 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள்

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இ
தமிழகத்தில் ரூ.224 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள்

சென்னை: தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

நாமக்கல் மாவட்டம் ஏமப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையம், திருப்பூா், தஞ்சாவூா் மாவட்டம் திருமலை சமுத்திரம், விழுப்புரம் மாவட்டம் சிட்டம்பூண்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் நோக்கியா நிறுவன வளாகம், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

இதேபோன்று, சேலம் மாவட்டம் பேளூா், தூத்துக்குடி அரசடி, செங்கல்பட்டு மாவட்டம் இந்தளூா், கோவை மாவட்டம் பந்தய சாலை, பட்டணம், நாகப்பட்டினம் மாவட்டம் கிடாரங்கொண்டான், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், கன்னியாகுமரி மாவட்டம் கேப் ஆகிய இடங்களிலும் துணை மின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த துணை மின் நிலையங்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் பி.தங்கமணி, வி.சரோஜா, தலைமைச் செயலாளா் கே.சண்முகம், எரிசக்தித் துறைச் செயலாளா் ஆ.காா்த்திக், தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் விக்ரம் கபூா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com