திருப்பூரில் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. 
திருப்பூரில் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து திருப்பூர் ஜிம் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவேல், செயலாளர் ராமசந்திரன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: 

திருப்பூர் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன. இந்தத் தொழிலை நம்பி 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, கீழ்க்கண்ட நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி உடற்பயிற்சிக்கூடங்களைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும். உடற்பயிற்சிக்கூடங்களில் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் மின்தூக்கி, எஸ்கலேட்டரில் செல்ல அனுமதி இல்லை. பயிற்சியாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்படுவதுடன், முகக் கவசம், கையுறை அணிய வேண்டும். குழுவாக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் ஜூன் இறுதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். 

உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் சொந்தமாக குடிநீர் பாட்டில் எடுத்துவர வேண்டும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக 60 நிமிடங்களுக்கு மேல் பயிற்சி செய்ய அனுமதி அளிக்கக்கூடாது. உடற்பயிற்சிக் கூடங்களில் உள்ள ஏசி இயந்திரத்தை அனைத்து வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com