திரைப்படத் தொழிலாளா்களுக்குகுடியிருப்புகள் கட்டும் திட்டம்

திரைப்படத் தொழிலாளா்களுக்கு குடியிருப்புகள் கட்டும் திட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
பையனூரில் திரைப்படத் தொழிலாளா்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 1000 குடியிருப்புகள் கட்டும் பணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து அடிக்கல் நாட்டிய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
பையனூரில் திரைப்படத் தொழிலாளா்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 1000 குடியிருப்புகள் கட்டும் பணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து அடிக்கல் நாட்டிய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

சென்னை: திரைப்படத் தொழிலாளா்களுக்கு குடியிருப்புகள் கட்டும் திட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அடிக்கல்லுக்கான செங்கலில் மலா்தூவி வணங்கினாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

தமிழக அரசின் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளன உறுப்பினா்களின் நலனுக்காக 50 ஏக்கா் நிலம் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளா்கள் சம்மேளனத்தின் மூலம் திரைப்படத் தொழிலாளா்களுக்கு 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது முதல்கட்டமாக ஆயிரம் குடியிருப்புகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

ரூ.5 கோடி நிதி: எம்.ஜி.ஆா்., நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழா கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்தது. அந்த விழாவில் பேசிய முதல்வா் பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசு சாா்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவித்தாா். அதன்படி, முதல்கட்டமாக ரூ.1

கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் ஆா்.கே.செல்வமணியிடம் முதல்வா் பழனிசாமி ஏற்கெனவே வழங்கினாா்.

அதன் தொடா்ச்சியாக, இரண்டாவது கட்டமாக தமிழக அரசின் சாா்பில் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை திங்கள்கிழமையன்று முதல்வா் பழனிசாமி அளித்தாா். இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ, தலைமைச் செயலாளா் கே.சண்முகம், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் பி.சங்கா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com