ஆந்திரத்தில் ரயில் நிலைய நிறுத்தங்களில் மாற்றம்

ஆந்திரத்தில் சில குறிப்பிட்ட முக்கிய நிலையங்களில் மட்டுமே ரயில்கள் நின்று செல்லும் விதம்
ஆந்திரத்தில் ரயில் நிலைய நிறுத்தங்களில் மாற்றம்

திருப்பதி: ஆந்திரத்தில் சில குறிப்பிட்ட முக்கிய நிலையங்களில் மட்டுமே ரயில்கள் நின்று செல்லும் விதம் ரயில் நிலைய நிறுத்தங்களில் மத்திய அரசு மாற்றங்களைச் செய்துள்ளது.

ஆந்திரத்தில் கரோனா நிபந்தனைகளுக்காக ரத்து செய்யப்பட்ட ரயில் சேவை மீண்டும் ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. ரயில் சேவை தொடங்கப்பட்டவுடன் மக்கள் அதில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தற்போது ஆந்திராவிலும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அம்மாநில அரசு ரயில்கள் வழக்கமாக நின்று செல்லும் அனைத்து வழித்தடங்களில் உள்ள நிலையங்களிலும் நிற்காமல் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியது.

அதற்கிணங்க மத்திய அரசும் ரயில் நிறுத்தங்களின் எண்ணிக்கை குறைத்துள்ளது. அவ்வாறு ரத்து செய்யப்பட்ட நிறுத்தங்களில் இறங்க இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயணச்சீட்டு தானாக ரத்தாகி விடும். அவ்வாறு ரத்தான பயணச் சீட்டுகளின் கட்டணங்கள் பயணிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

முன்பதிவு கவுண்டர்களில் டிக்கெட் பெற்றவர்களின் பயணச்சீட்டு பி.என்.ஆர் சார்ட் தயாராகும் முன் கவுண்டர் ரிசர்வேஷன் சிஸ்டத்தில் ரத்து செய்யப்படும். அவர்கள் தங்கள் அசல் பயணச் சீட்டை ரயில் நிலைய முன்பதிவு கவுண்டரில் 30 நாட்களுக்குள் சமர்ப்பித்து தங்கள் கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com