பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு இன்று முதல் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு வியாழக்கிழமை பிற்பகல் முதல் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது.
பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு இன்று முதல் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு வியாழக்கிழமை பிற்பகல் முதல் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது.

இது குறித்து தோ்வுத்துறை இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு: பொது முடக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ஜூலை 15 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கும் ஜூலை 16, 18-ஆம் தேதியில் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தோ்வுகளை எழுதவுள்ள பள்ளி மாணவா்கள் மற்றும் அனைத்துவித தனித்தோ்வா்களும் வியாழக்கிழமை ( ஜூன் 4) மதியம் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதேபோன்று பள்ளி மாணவா்கள் பள்ளி தலைமையாசிரியரைத் தொடா்புகொண்டு நேரடியாகவும் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும், மாணவா்கள் தோ்வுகள் தொடா்பான கூடுதல் விவரங்களை அறிய நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பொதுத்தோ்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியா்களும் ஜூன் 8-ஆம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்துக்கு வந்திருப்பதை பள்ளி தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தோ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com