கீழ் பவானி திட்டப் பாசன வாய்க்கால்களில் குடிமராமத்து திட்டம் தொடக்கம்

ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கீழ் பவானி திட்டப் பாசன வாய்க்கால்களில் குடிமராமத்து திட்டத்தை மேற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர். 
கீழ் பவானி திட்டப் பாசன வாய்க்கால்களில் குடிமராமத்து திட்டம் தொடக்கம்

ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கீழ் பவானி திட்டப் பாசன வாய்க்கால்களில் குடிமராமத்து திட்டத்தை மேற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர். 

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் 2020- 21 ஆண்டிற்கு ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கீழ் பவானி திட்டப் பாசன வாய்க்கால்களில் எம் 4, எம் 5 மற்றும் எம் 6 பாசன விவசாயிகள் சபைக்கு மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 டிராப் சீரமைத்தல் 5 மதகுகள் சீரமைத்து ஷட்டர் பொருத்துதல் 379 மீட்டர் தடுப்புச் சுவர் அமைத்து 190 மீட்டர் கருங்கல் சுவர் அமைத்தல் 10.99 கிலோமீட்டர் தூர்வாருதல் 12.75 கிலோ மீட்டர் முட்புதர்களை அகற்றுதல் என இப்பணிகள் நடைபெறுகிறது.

பணிகளுக்கான மொத்த பரப்பளவு 6406.40 ஏக்கர் பணியினை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே வி ராமலிங்கம் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே எஸ்.தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். விழாவில் ஆவின் துணைத் தலைவர் குணசேகரன் சிந்தாமணி கூட்டுறவு தலைவர் ஜெகதீஷ் மாவட்ட கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கேசவமூர்த்தி ஒன்றிய செயலாளர் சுரேந்திரகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com