தமாகா இளைஞரணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறார் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ
தமாகா இளைஞரணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறார் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ

தமாகா இளைஞரணி சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம்: எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன்

கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி..

கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடலூர் மத்திய மாவட்ட தமாகா இளைஞரணி தலைவர் கே.ரஜினிகாந்த் தலைமை வகித்தார்.  சிதம்பரம் நகரத் தலைவர் தில்லை ஆர் மக்கீன் வரவேற்றார்.  மாவட்ட துணைத்தலைவர்கள் பிகே காந்தி, ராஜா சம்பத்குமார், எஸ் கே வைத்தி, மாவட்ட பொதுச்செயலாளர் கே நாகராஜன், குமராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.கே பாலா, சேதுமாதவன், மாவட்ட தொண்டர் அணி தலைவர் குமார், மாவட்ட மகளிரணி தலைவி ராஜலட்சுமி, மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிமுக மாவட்டச் செயலாளரும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 200 பேருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், முன்னாள் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், சிதம்பரம் நகராட்சி ஆணையர் பி.வி.சுரேந்தரஷா, நகர காவல் நிலைய ஆய்வாளர் சி.முருகேசன், சமூக ஆர்வலர் தில்லைசீனு, தாமாக நிர்வாகிகள் பாண்டு, ஆர்.வி சின்ராஜ், எஸ்.எஸ்.நடராஜன், கீரை முருகன், பாலகுரு, ஆலா என்கின்ற தினேஷ், சாய் முரளி கிருஷ்ணன், கணேஷ், ராஜ்குமார், அன்பழகன், ராஜராஜன் மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கோ ஜனகம், சுப்புலட்சுமி, தில்லைசெல்வி, மீனா செல்வம், சாந்தி, ராதா, நீலாவதி, மாலா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் சிதம்பரம் நகர இளைஞரணி தலைவர் துரை.சிங்கார வேல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com