சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழு: முதல்வர் உத்தரவு

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழு: முதல்வர் உத்தரவு

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். 

சென்னையில் உள்ள 15 மண்டலங்களும் ஐந்தாகப் பிரித்து ஒவ்வொரு அமைச்சருக்கும் மூன்றாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு மண்டலங்கள் 3,4,5 முறையே மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம்

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு மண்டலங்கள் 13,14,15 முறையே அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர். 

உணவுப் பொருள் வழங்கல்  துறை அமைச்சர் காமராஜூக்கு மண்டலங்கள் 8,9,10 முறையே அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மண்டலங்கள் 1,2,6 முறையே திருவொற்றியூர், மணலி, திரு.வி.க. நகர். 

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மண்டலங்கள் 7,11,12 முறையே அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com