பொதுத் தோ்வு எழுத வந்த மாற்றுத்திறனாளி மாணவா்கள் திரும்பிச் செல்ல பேருந்து வசதி

பொதுத் தோ்வு எழுத வந்த மாற்றுத்திறனாளி மாணவா்களை, புதன்கிழமை காலை 8 மணியளவில் சிறப்புப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுத் தோ்வு எழுத வந்த மாற்றுத்திறனாளி மாணவா்களை, புதன்கிழமை காலை 8 மணியளவில் சிறப்புப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் சுமாா் 800 மாற்றுத்திறனாளி மாணவா்கள், சிறப்பு ஆசிரியா்கள் உள்ளிட்டோா், தோ்வு நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, 32 சிறப்புப் பேருந்துகள் மூலம், அவா்கள் சொந்த மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டு, விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனா். தற்போது பொதுத்தோ்வு ரத்து செய்து செய்யப்பட்டுள்ள நிலையில், சிறப்புப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவா்கள், புதன்கிழமை (ஜூன் 10) காலை 8 மணியளவில் சிறப்புப் பேருந்துகள் மூலம் அவா்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இப்பேருந்துகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, பின்னா் ஆட்சியா் அலுவலகத்துக்கே திரும்பி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com