கரோனா அவலம்: 10 அடி தூரத்தில் டார்ச் அடித்து சிகிச்சை பார்த்த மருத்துவர்

உலகையே உலுக்கிய கரோனா தீநுண்மியால் மக்கள் படும்பாடு சொல்லில் மாளாது. உயிரிழப்பு முதல் வாழ்வாதாரம் பறிபோனது வரை ஆயிரமாயிரம் துயரங்களை மக்களுக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கரோனா அவலம்: 10 அடி தூரத்தில் டார்ச் அடித்து சிகிச்சை பார்த்த மருத்துவர்


உலகையே உலுக்கிய கரோனா தீநுண்மியால் மக்கள் படும்பாடு சொல்லில் மாளாது. உயிரிழப்பு முதல் வாழ்வாதாரம் பறிபோனது வரை ஆயிரமாயிரம் துயரங்களை மக்களுக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, கரோனா அச்சம் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கண்டமலங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் டார்ச் அடித்து சிகிச்சை பார்த்த சம்பவம் டிவிட்டர் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காய்ச்சல் காரணமாக கண்டமங்கலத்தில்  உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுள்ளார் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன். காய்ச்சல் என்றதும், மருத்துவமனை வாயிலிலேயே நிற்கவைக்கப்பட்ட சிறுவனை, மருத்துவர் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து டார்ச் அடித்துப் பார்த்து மருந்து எழுதிக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, இரண்டு நாள்களுக்கு முன்பு, இளைஞர் ஒருவர் தொண்டை வலியென்று சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது, நுழைவு வாயில் முன்பே தடுப்பு ஏற்படுத்தி அமர்ந்திருந்த மருத்துவர், 
பெண் ஊழியர் ஆகியோர் சிகிச்சைக்கு வந்தவரை 10 மீட்டர் இடைவெளியில்
நிறுத்தி வைத்து தொண்டை வலி பாதிப்புக்கு பரிசோதித்து உள்ளனர். அந்த டாக்டர் கையில் வைத்திருந்த டார்ச்லைட்டை எடுத்து 10 மீட்டர் தூரத்தில் நின்ற இளைஞரின் முகத்தில்அடித்துள்ளார்.

டார்ச்சின் வெளிச்சம் செல்வதே கடினம் என்றபோது, தொண்டையில் என்ன பாதிப்பு இருக்கிறது என்பதை எப்படி அறிய முடியும்.  இருப்பினும், கடமைக்காக சிகிச்சை அளித்த டாக்டர், உடனே, அருகில் இருந்த மருத்துவ பெண் ஊழியர் மூலம் மாத்திரை வழங்கி அனுப்பி வைத்தார்.
மருத்துவரின் இந்த அலட்சிய செயல் வாட்ஸ்ஆப் மூலம் இரு தினங்களாக பரவியது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர், குறிப்பிட்ட மருத்துவர் பிரகாஷ், பெண் ஊழியர் பூஞ்சோலை ஆகியோருக்கு விளக்கம் கேட்டு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இச்சம்பவம் சுகாதாரத் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com