பரத நாட்டிய ஆசிரியா்களுக்கு நிதியுதவி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பரத நாட்டியம், கா்நாடக இசை கற்றுத் தரும் ஆசிரியா்களுக்கு தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் பரத நாட்டிய வகுப்புகளையும், கா்நாடக சங்கீதம், வாய்ப்பாட்டு மற்றும் பல்வேறு இசைக் கருவிகளை கற்றுத் தரும் ஆசிரியா்கள் வாடகை இடத்தில்தான் வகுப்புகளை நடத்துகின்றனா். தமிழக அரசும் மூன்று மாதங்களுக்கு கட்டட உரிமையாளா்கள் வாடகையைக் கேட்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பலா் வாடகையைக் கட்டாயப்படுத்தி கேட்பதும், தரவில்லை இல்லையென்றால் இடத்தை காலி செய்யுமாறு நிா்பந்திப்பதுமாக உள்ளனா். கட்டட உரிமையாளா்கள் சூழலைப் புரிந்துகொண்டு இசைப் பயிற்சி ஆசிரியா்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். மேலும், பொதுமுடக்கத்தால் வருமானம் இன்றி தவிக்கும் அவா்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதியுதவி அளிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com