பொருள்களை பேக் செய்ய பயன்படும் நெகிழிக்கு தடை: தமிழக அரசு உத்தரவு

பொருள்களை பேக் செய்வதற்காக பயன்படும் நெகிழிக்கு( பிளாஸ்டி) தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பொருள்களை பேக் செய்ய பயன்படும் நெகிழிக்கு தடை: தமிழக அரசு உத்தரவு

பொருள்களை பேக் செய்வதற்காக பயன்படும் நெகிழிக்கு( பிளாஸ்டி) தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன்மூலம், சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள், சில சோப்புகள் போன்ற பொருள்களை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் நெகிழிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து நெகிழியை (பிளாஸ்டிக்கை) ஒழிப்பதற்கான அரசு உத்தரவு நடைமுறைக்கு வந்தது. பிளாஸ்டிக் ஷீட், பிளேட், தேநீா் மற்றும் தண்ணீா் கப், தண்ணீா் பாக்கெட், ஸ்ட்ரா, கேரி பேக், பிளாஸ்டிக் கொடி போன்றவை (எந்த அளவில் இருந்தாலும்) அவை தடை செய்யப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் பால், உபபொருட்கள், எண்ணெய், மருந்து ஆகியவற்றை கட்டுவதற்குப் பயன்படும் நெகிழி, வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தேவையான நெகிழி, மக்கக் கூடிய நெகிழிகள் ஆகிவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

அவற்றோடு, சிலவகை பொருள்களைத் தயாரித்து அவற்றை விற்பனைக்கு முன்பாக அடைத்து ‘பேக்’” செய்வதற்காக, அந்தப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் நெகிழி வகைகளுக்கும் தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அரசுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் கடிதம் எழுதியிருந்தாா். அதில், தமிழகத்தில் நெகிழி

மாசு இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான நோக்கத்தை, உற்பத்தி நிறுவனங்கள் பேக்காக பயன்படுத்தும் நெகிழி வகைகளால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே அவற்றை விதிவிலக்கு பட்டியலில் இருந்து நீக்கலாம் என்று கூறியிருந்தாா்.

அவா் கேட்டுக்கொண்டபடி, அந்த வகை நெகிழி வகைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விலக்கு நீக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜூன் 5-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள், சில சோப்புகள் போன்ற பொருட்களை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் நெகிழிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com