திருப்பூரில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தர்ணா

திருப்பூரில், மாநகராட்சி ஒப்பந்தம் தூய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், பணியைப் புறக்கணித்தும் தூய்மைப் பணியாளர்கள் வியாழக்கிழமை மதியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தர்ணா

திருப்பூரில், மாநகராட்சி ஒப்பந்தம் தூய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், பணியைப் புறக்கணித்தும் தூய்மைப் பணியாளர்கள் வியாழக்கிழமை மதியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் 900 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், விடுமுறையின்றி பணியாற்றி வரும் இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத ஊதியம் வழங்கவில்லை.

ஏற்கெனவே சிறப்பு ஊதியம் அறிவிக்கப்படாத நிலையில், கடந்த இரு மாத ஊதியம் வழங்கவில்லை. இதனால் அன்றாடத் தேவைகளுக்காகச் சிரமத்திற்குள்ளாகி வந்த தூய்மைப்பணியாளர்கள் மாநகராட்சி 4வது மண்டலம் கருவம்பாளையம் டிவிசன் அலுவலகத்தில் பணியைப் புறக்கணித்து வியாழக்கிழமை மதியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார். 

இது குறித்து தூய்மைப்பணியாளர்கள் கூறியது..

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கடந்த 2019 முதல் மார்ச், 2020 வரை நாள்தோறும் ஊதியம் ரூ.420 என ஒப்பந்தம் நிர்ணயம் செய்துள்ள நிலையிலும் ரூ. 300 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதவும் கடந்த 2 மாதமாக வழங்கவில்லை. மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே பணியைத் தொடருவோம் என்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி நிர்வாகத்தினர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்பட்டது. 

மேலும், மீதமுள்ள ஊதியம் புதன்கிழமை வழங்குவதாகவும், இனிவரும் ஒவ்வொரு மாதம் 10ம் தேதிக்குள் முறைப்படுத்தித் தருவதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com