ஆண்டிபட்டியில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 13 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டியில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 13 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே பிராதுக்காரன்பட்டி, ரோசனப்பட்டி, முத்துசங்கிலிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சிலைகள், கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. மேலும் இப்பகுதியில் சிதிலமடைந்த நிலையில் விநாயகர், அம்மன், போகர் சிலைகள் காணப்படுகிறது. இச்சிலைகளுக்கு அப்பகுதிமக்கள் ஒவ்வொரு ஆண்டும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.இதுகுறித்து அறிந்த மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று உதவி பேராசிரியர்கள் எஸ்.ராஜகோபால், ஆர்.பிறையா ஆகியோர் இணைந்து இப்பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.அப்போது பிராதுக்காரன்பட்டி மற்றும் ரோசனப்பட்டி கிராமங்களுக்கு இடையே 13 ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர் காலத்துக் கல்வெட்டு ஒன்றைக் கண்டுப்பிடித்தனர்.

இதுகுறித்து உதவி பேராசிரியர் ஆர்.பிறையா கூறியது, 

இந்த கல்வெட்டு நான்கு அடி நீலமும், ஓரு அடி அகலமும் கொண்டது. இதில் முழுமையடையாத ஏழு வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர் சி.சாந்தலிங்கம் உதவியுடன் அதில் உள்ள எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி அதில் உள்ள எழுத்துக்கள் அப்பகுதியை ஆண்ட சிறிய தலைவனான கிளாங்குடி தேவர் தொண்டைமான் என்பவருக்கு திருப்புவன்கோன் அங்கராயன் என்ற குடிமகன் வழங்கிய பரிசு பற்றி இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் இதுபோன்ற கல்வெட்டுகள் அதிகளவில் இருப்பதால் தொடர்ந்து அப்பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறியது, 

இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஆங்காங்கே பழங்கால கற்சிலைகள் கேட்பாரின்றி கிடக்கிறது. இதில் சில தமிழ் கல்வெட்டுகளும் உள்ளது. இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தினால் பழங்கால சிலைகள் மற்றும் பழங்கால மக்களின் வாழ்விடம் குறித்த தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com