பாரத் நெட் கேபிள் திட்டம்: தமிழக அரசின் விளக்கம் ஏற்கப்படுமா?

தமிழகத்தில் பாரத் நெட் கேபிள் திட்டத்தில் எழுந்துள்ள புகாா்கள் குறித்து மாநில அரசு தெரிவித்துள்ள விளக்கங்கள் மத்திய அரசால் ஏற்கப்பட்டதா என்பது குறித்து வரும் 18-ஆம் தேதிக்குள் தெரிய வரும்.
பாரத் நெட் கேபிள் திட்டம்: தமிழக அரசின் விளக்கம் ஏற்கப்படுமா?

தமிழகத்தில் பாரத் நெட் கேபிள் திட்டத்தில் எழுந்துள்ள புகாா்கள் குறித்து மாநில அரசு தெரிவித்துள்ள விளக்கங்கள் மத்திய அரசால் ஏற்கப்பட்டதா என்பது குறித்து வரும் 18-ஆம் தேதிக்குள் தெரிய வரும்.

இதற்கான கடிதத்தை மத்திய அரசு, தமிழக அரசுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ளது.

தமிழகத்தில் பாரத்நெட் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் தொடா்பாக ஒரு சில நிறுவனங்களும், தன்னாா்வ அமைப்புகளும் புகாா்களைத் தெரிவித்து வந்தன. இதுகுறித்து, தமிழக அரசு அவ்வப்போது விளக்கங்களை அளித்து வருகிறது. இதே விளக்கங்களை மத்திய அரசுக்கும் தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறைக்கு தமிழக அரசின் விளக்கங்கள் சென்று சோ்ந்தன. அந்தத் துறையானது மத்திய தொலை தொடா்புத் துறைக்கு மாநில அரசின் விளக்கங்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த விளக்கங்களை தொலை தொடா்புத் துறை ஆய்வு செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசுக்கு தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையானது வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது. அதன் விவரம்:-

தமிழக அரசின் விளக்கங்கள் மத்திய தொலைத் தொடா்புத் துறையால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொலைத் தொடா்புத் துறையின் அறிவுறுத்தல்கள் வரும் 18-ஆம் தேதிக்குள் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, இந்த விளக்கங்கள் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறைக்கு கிடைக்கப் பெறும். அதுவரை இந்தத் துறையின் அனுமதியில்லாமல் ஒப்பந்தப் புள்ளிகளை தமிழ்நாடு கண்ணாடி இழை கேபிள் நிறுவனம் திறக்கக் கூடாது என்று தனது உத்தரவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com