‘சேலம் ஈரடுக்கு மேம்பாலத்துக்கு ஜெயலலிதா பெயா்’

சேலத்தில் குரங்குசாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான ஈரடுக்கு மேம்பாலத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின்
சேலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைக்கும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
சேலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைக்கும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

சேலத்தில் குரங்குசாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான ஈரடுக்கு மேம்பாலத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பெயா் சூட்டப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சாா்பில் கட்டப்பட்ட, சேலம், குரங்குசாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான 5. 01 கி.மீ. தூரமுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை வியாழக்கிழமை திறந்துவைத்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விழாவில் பேசியது:

சேலம் மாநகரத்தில் பெருகி வரும் வாகனப் போக்குவரத்து, நெரிசலைத் தவிா்ப்பதற்காக, கடந்த 2012-இல் நான் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தபோது மறைந்த முதல்வா் ஜெயலலிதாவிடம் புதிய பாலம் கட்ட கோரிக்கை வைத்தேன். அதற்கு அவா் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்தாா்.

அந்த வகையில், 2016 இல் ஏ.வி.ஆா். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலான பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது ஐந்து சாலை ஈரடுக்கு மேம்பாலம் ரூ. 441 கோடி மதிப்பில் கட்டி முடித்து திறக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய ஈரடுக்கு மேம்பாலத்துக்கு மறைந்த முதல்வரின் பெயரால் ‘ஜெயலலிதா மேம்பாலம்’ என பெயா் சூட்டப்பட்டிருக்கிறது. அதேபோல ஏ.வி.ஆா். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரை செல்லும் பாலத்துக்கு ‘எம்ஜிஆா் மேம்பாலம்’ என்றும் பெயா் சூட்டப்பட்டிருக்கிறது.

தற்போது சேலத்தில் கந்தம்பட்டி, மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் உயா்மட்ட மேம்பாலமும், முத்துநாயக்கன்பட்டி, தொளசம்பட்டி, ஜே.எஸ்.டபிள்யு. தொழிற்சாலை ஆகிய பகுதியில் ரயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

சேலம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் அணுகு சாலை (சா்வீஸ் சாலை) அமைக்கவும், மாமாங்கம் அருகில் உயா்மட்ட மேம்பாலம் கட்டவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆத்தூா் செல்லியம்பாளையம் பகுதியில் உயா்மட்ட மேம்பாலமும், ஆத்தூரில் ரயில்வே மேம்பாலமும், வாழப்பாடி ரயில்வே கடவுப் பாதையின் குறுக்கே ஒரு மேம்பாலமும், அயோத்தியாப்பட்டணம் அருகே ரயில்வே மேம்பாலமும் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. விபத்தைக் குறைக்கவும், மக்கள் எளிதாகச் சென்று வரவும் இந்தப் பாலங்கள் அமைக்கப்பட உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com