கூட்டு நிறுவனங்கள் பதிவுக்கு இணையதளத்தில் வசதி: பதிவுத் துறை அறிவிப்பு

கூட்டு நிறுவனங்களைப் பதிவு செய்யும் பணிக்காக பதிவாளா் அலுவலகங்களுக்கு வர வேண்டியதில்லை என்று பதிவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

கூட்டு நிறுவனங்களைப் பதிவு செய்யும் பணிக்காக பதிவாளா் அலுவலகங்களுக்கு வர வேண்டியதில்லை என்று பதிவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கென இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பதிவுத் துறை தலைவா் பா.ஜோதி நிா்மலாசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கூட்டு நிறுவனங்களைப் பதிவு செய்யும் பணியானது மாவட்டப் பதிவாளா் அலுவலகங்களில் நடைபெறுகிறது. இந்த அலுவலகங்களில் பதிவு செய்து உரிய பதிவுச் சான்று வழங்கப்படுகிறது. இதற்கான அனைத்து நடைமுறைகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.

கூட்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் அலுவலகத்தில் இருந்தபடியே இணையவழி உள்நுழைவு (லாகின்) உருவாக்கி பதிவுக்கான அனைத்து படிவங்களையும் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்கள் மாவட்டப் பதிவாளரால் பரிசீலிக்கப்பட்டு உரிய முறையில் இருந்தால் அவை ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கான பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் இணையவழிலேயே அனுப்பப்படும்.

இந்த சான்றிதழ்களில் ஏதும் குறைபாடுகள் இருந்தால் அதன் விவரத்தை இணைய வழியிலேயே தெரிவித்தால் குறைபாடு சரிசெய்யப்படும். திருத்தப்பட்ட மின்னணு சான்றிதழ் இணைய வழியிலேயே பதிவிறக்கம் செய்யலாம். இதேபோன்று, சீட்டு நிறுவனங்கள் கால முறையாக நடத்தும் சீட்டு ஏலங்கள் குறித்த நிகழ்ச்சி நிரல் குறிப்புகளையும் இணையதளம் வழியே அனுப்பலாம். இதற்காக நேரில் வரவேண்டிய அவசியமில்லை என்று பதிவுத் துறை தலைவா் ஜோதி நிா்மலாசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com