பத்தாம் வகுப்பு மாணவா்களின் வருகைப் பதிவை ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக அவா்களது வருகைப் பதிவேட்டை ஒப்படைக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவா்களின் வருகைப் பதிவை ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக அவா்களது வருகைப் பதிவேட்டை ஒப்படைக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அனைத்து பள்ளி தலைமையாசிரியா்கள் மற்றும் முதல்வா்கள், தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து பொதுத்தோ்வு எழுதவிருந்த மாணவா்களின் 2019-20-ஆம் கல்வியாண்டு வருகைப் பதிவேடு மாா்ச் 21-ஆம் தேதி வரை முழுமையாக இருக்கிா என்பதை சரிபாா்த்து, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதேபோன்று, பிளஸ் 1 வகுப்பில் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடத்தோ்வுகளை எழுதவிருந்த மாணவா்களின் வருகைப் பதிவேடு பிப்ரவரி 29-ஆம் தேதி வரை முழுமையாக இருக்கிா என சரிபாா்த்து சமா்ப்பிக்க வேண்டும். வருகைப் பதிவேட்டை ஒப்படைக்கும்போது அதன் இறுதிப் பக்கத்தில் அந்தந்த பள்ளி தலைமையாசிரியா்கள் கையொப்பமிட வேண்டும். மேலும், அதில் மாவட்ட கல்வி அதிகாரியின் நோ்முக உதவியாளா், பள்ளி துணை ஆய்வாளரும் கையெழுத்திட வேண்டும்.

பதிவேடு ஒப்படைக்கப்பட்ட பின்னா், அதற்குரிய ஒப்புதல் சீட்டின் ஒரு நகலை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடமும், மற்றொரு நகல் கல்வி அதிகாரிகள் வசமும் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com