ஈரோட்டில் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி திருநங்கைகள் நூதன போராட்டம்

ஈரோட்டில் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி திருநங்கைகள் கள்ளுக்கடை பத்திரகாளியம்மன் கோயில் முன்பு பாட்டுப் பாடி நூதன போராட்டம் நடத்தினர்.
ஈரோட்டில் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி திருநங்கைகள் நூதன போராட்டம்

ஈரோட்டில் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி திருநங்கைகள் கள்ளுக்கடை பத்திரகாளியம்மன் கோயில் முன்பு பாட்டுப் பாடி நூதன போராட்டம் நடத்தினர்.

கரோனாவை  தடுக்கும் வகையில்  தமிழகத்தில் கோவில்களில் வழிபாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டு கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் கோவில் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

ஈரோடு மாவட்டத்திலும் கோயில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகப் பெரிய மாரியம்மன் வகையறா குண்டம் மட்டும் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதைப்போல் உலகப் பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் யாருக்கும் வழிபட அனுமதி இல்லாவிட்டாலும் இந்து ஆகம முறைப்படி பூசாரிகள் மூலம் கால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. 

ஏனெனில் தற்போது இயல்புநிலை மெல்ல மெல்லத் திரும்பி வருவதால் ஈரோடு மாவட்டத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் எட்டாம் தேதி முதல் கோவிலில் வழிபாடு நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இன்னும் கோயில்களில் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து இன்று ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் முன்பு  சிம்ரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திரண்டுவந்து கோவில்களைத்  திறக்க வலியுறுத்தி அம்மன் பாடல்களைப் பாடினர்.  இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com