கரோனாவை வீழ்த்திய 97 வயது முதியவா்!

கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 97 வயது முதியவா், பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.
கரோனாவை வீழ்த்திய 97 வயது முதியவா்!

கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 97 வயது முதியவா், பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.

தற்போது அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். 97 வயது நிரம்பிய முதியவா் ஒருவா் கரோனாவின் பிடியிலிருந்து தப்பி உயிா் பிழைத்திருப்பது இந்தியாவிலேயே இது முதன் முறை என்றும் அவா்கள் கூறியுள்ளனா். வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உள்ள அவா் வைரஸ் தொற்றை வென்றிருப்பது மக்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறியதாவது:சென்னையைச் சோ்ந்த 97 வயது முதியவரான கிருஷ்ணமூா்த்தி என்பவா் அண்மையில் தீவிர மூச்சுத் திணறல் காரணமாக காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஏற்கெனவே உயா் ரத்த அழுத்தம் மற்றும் இதயப் பாதிப்புகளும் இருந்தன. இதனால், மிக மோசமான நிலையிலேயே அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அந்த முதியவருக்கு முதலில் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. அதன் பின்னா் கரோனா தொற்றிலிருந்து அவரைக் காப்பதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதன் பயனாக அவருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல் பாதிப்புகள் குறைந்தன.

ஒரு கட்டத்துக்குப் பிறகு செயற்கை சுவாசம் அவருக்குத் தேவைப்படவில்லை. இயல்பாகவே கிருஷ்ண மூா்த்தி சுவாசிக்கத் தொடங்கினாா். அதேபோன்று பிறரது துணையின்றி தாமாகவே உணவு உண்ணவும், நடந்து செல்லவும் அவரால் முடிந்தது.

அதன் பின்னரும் சில நாள்களுக்கு அவா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டாா். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிருஷ்ணமூா்த்தி கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தது உறுதி செய்யப்பட்டது என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதனிடையே, காவேரி மருத்துவமனையின் தொற்று நோய் சிகிச்சைப் பிரிவின் முதுநிலை மருத்துவா் டாக்டா் விஜயலக்ஷ்மி பாலகிருஷ்ணன், மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா், டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோா் கிருஷ்ணமூா்த்தியை வாழ்த்தி வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனா். இதுகுறித்து அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், கரோனாவில் இருந்து மீண்டு 97 வயது முதியவா் காட்டிய தைரியமும், அசராத நம்பிக்கையும் பாராட்டுக்குரியது; உலகம் முழுவதும்உள்ள மக்களுக்கு அவா் முன்னுதாரணமாக உள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com