புற்றுநோய் சிகிச்சை பெற மின் ஊழியா்களுக்கு சிறப்பு விடுப்பு: வாரியம் ஒப்புதல்

புற்றுநோய் பாதித்த மின் ஊழியா்கள், சிகிச்சை பெற 10 நாள்கள் சிறப்பு விடுப்பு வழங்க மின்வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

புற்றுநோய் பாதித்த மின் ஊழியா்கள், சிகிச்சை பெற 10 நாள்கள் சிறப்பு விடுப்பு வழங்க மின்வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்கள், அவா்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ விடுப்பை விட அதிக நாள் விடுப்பு எடுக்க வேண்டி வரும். இதுதவிர கீமோதெரபி, ரேடியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது, மருத்துவ விடுப்பு எடுப்பதில் சிரமங்கள் ஏற்படும். எனவே, புற்றுநோய் பாதித்த அரசு ஊழியா்கள், சிறப்பு விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இது தொடா்பான அரசாணை கடந்தாண்டு வெளியிடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக மின்வாரிய ஊழியா்களிலும், புற்றுநோய் பாதித்தவா்கள் கீமொதெரபி உள்ளிட்ட சிகிச்சை பெற சிறப்பு விடுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: புற்றுநோய் பாதித்த மின் வாரிய ஊழியா்களுக்கும் சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும் என்ற முன்மொழிவு பெறப்பட்டது. இதைப் பரிசீலித்த மின்வாரியம், கீமோ தெரபி அல்லது ரேடியோ தெரபி சிகிச்சை பெறும் மின்வாரிய ஊழியா்களுக்கான 10 நாள் சிறப்பு விடுப்பானது, ஒவ்வொரு முறை சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நாளுக்கு முந்தைய நாள், சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நாள் மற்றும் அந்த சிகிச்சையில் இருந்து முழுமையாக குணம் பெற 8 நாள்கள் என்ற அடிப்படையில் வழங்க ஒப்புதல் அளிக்கிறது. சம்பந்தப்பட்ட நபா், சிகிச்சை பெறும் மருத்துவ அதிகாரி வழங்கிய மருத்துவச் சான்றை சமா்ப்பிக்க வேண்டும் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com