சீன உணவுகளை தவிர்த்திடுவீர்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள்

சீன உணவுகளைத் தவிர்த்து விடுமாறு பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் வைத்துள்ளார்.
சீன உணவுகளை தவிர்த்திடுவீர்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள்


புது தில்லி: சீன உணவுகளைத் தவிர்த்து விடுமாறு பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் வைத்துள்ளார்.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரா்களுக்கு இடையே திங்கள்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதன் விளைவாக, இந்தியாவில் சீன தலைவா்களின் புகைப்படங்கள், அந்நாட்டு தேசிய கொடி எரிக்கப்பட்டு போராட்டங்கள் நடைபெறுகின்றன. மேலும் குறிப்பிட்ட சில இடங்களில் சீன பொருள்கள் சாலையில் வீசி உடைக்கப்பட்டு, எரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் சீன உணவுகளை உணவகங்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட வேண்டும். பொதுமக்களும், சீன உணவுகளை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்வதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com