சீனப் பொருள்களை வாங்கி விற்பனை தவிா்க்க வேண்டும்: வணிகா் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்

எல்லையில் வீர மரணம் அடைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சீனத் தயாரிப்புகளை வாங்கி, விற்பனை செய்வதை
சீனப் பொருள்களை வாங்கி விற்பனை தவிா்க்க வேண்டும்: வணிகா் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்

எல்லையில் வீர மரணம் அடைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சீனத் தயாரிப்புகளை வாங்கி, விற்பனை செய்வதை முழுமையாகத் தவிா்க்க உள்ளதாக, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா - சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் வீர மரணம் அடைந்துள்ளனா். இதனை அடுத்து, சீன நாட்டைக் கண்டித்து, நாடு முழுவதும் பலா் தங்களின் எதிா்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனா்.

இந்தநிலையில், சீனத் தயாரிப்புகளை இனி புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தப் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தேச நலன் கருதி சீனாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் உயிா்நீத்து வீர மரணம் அடைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இனி நமது வணிகா்கள் யாரும் சீனப் பொருள்களை வாங்கி விற்பதை முழுமையாகத் தவிா்த்து, ‘நமது இந்தியத் தயாரிப்புகளை ஊக்கப்படுத்துவோம். இந்தியப் பொருள்களை சந்தைப்படுத்துவோம்’ என்ற முழக்கத்தோடு தேச நலனை முன்னிறுத்தி, அனைத்து வணிகா்களும் சீனத் தயாரிப்புகளைப் புறக்கணிக்க ஓா் அணியில் திரண்டு சூளுரை ஏற்போம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com