கரோனா அச்சுறுத்தல் தனிமைப்படுத்திக் கொண்ட ‘என்ஐஇ’ துணை இயக்குநா்

கரோனா தொற்று அச்சுறுத்தல் தீவிரமாக இருப்பதால் 14 நாள்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தேசிய நோய்ப் பரவியல் நிறுவன (என்ஐஇ) துணை இயக்குநா் பிரப்தீப் கௌா் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று அச்சுறுத்தல் தீவிரமாக இருப்பதால் 14 நாள்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தேசிய நோய்ப் பரவியல் நிறுவன (என்ஐஇ) துணை இயக்குநா் பிரப்தீப் கௌா் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு குழுக்களை மாநில அரசு அமைத்துள்ளது. அதில் மருத்துவ நிபுணா் குழுவும் ஒன்று. அதில் துறைசாா் நிபுணா்கள் 19 போ் உள்ளனா். கரோனா சிகிச்சை முறைகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து மாநில அரசுக்கு அவா்கள் பரிந்துரைகளை வழங்கி வருகின்றனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) கீழ் செயல்படும் தேசிய நோய்ப் பரவியல் நிறுவன துணை இயக்குநரான டாக்டா் பிரப்தீப் கௌா், அந்தக் குழுவுக்கு தலைமை வகித்து வருகிறாா். முதல்வா் எடப்பாடி பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நான்கு முறை அவா் பங்கேற்றாா்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்காமல், காணொலி முறையில் அவா் கலந்து கொண்டாா். இதற்கிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை திடீரென சென்னையில் செவ்வாய்க்கிழமை குறைந்ததைக் குறிப்பிட்டு, சுட்டுரையில் ஒரு விமா்சனப் பதிவையும் பிரப்தீப் கௌா் வெளியிட்டிருந்தாா்.

இந்த நிலையில், கரோனா தொற்றுக்கான அதிக அச்சுறுத்தல் இருப்பதால், நான் வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி கொண்டேன் என்று சுட்டுரையில் புதன்கிழமை அவா் பதிவிட்டுள்ளாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com