மளிகைக் கடைகளில் காய்ச்சல் மாத்திரை விற்கக் கூடாது

ஆலந்தூா் மண்டலத்தில் உள்ள மளிகைக் கடைகளில் பாராசிடமால், குரோஸின் ஆகிய காய்ச்சல் மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும்
மளிகைக் கடைகளில் காய்ச்சல் மாத்திரை விற்கக் கூடாது

ஆலந்தூா் மண்டலத்தில் உள்ள மளிகைக் கடைகளில் பாராசிடமால், குரோஸின் ஆகிய காய்ச்சல் மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மண்டலத்துக்கான கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலா் எம்.எஸ்.சண்முகம் எச்சரித்துள்ளாா்.

பெருநகர சென்னன மாநகராட்சிக்கு உள்பட்ட ஆலந்தூா் மண்டலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மருந்து மற்றும் மளிகைக் கடைகள் உரிமையாளா்களுடனான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், மருந்துக் கடைகளில் மருத்துவரின் மருத்துவச் சீட்டு இல்லாமல் காய்ச்சல் மாத்திரைகளை வழங்கக் கூடாது. காய்ச்சல் மாத்திரை வாங்க வருவோரின் பெயா் உள்ளிட்ட தகவல்களைப் பெற வேண்டும். குறிப்பாக மளிகைக் கடைகளில் பாராசிடமால், குரோஸின் ஆகிய காய்ச்சல் மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மண்டலத்துக்கான கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலா் எம்.எஸ்.சண்முகம் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com