தங்கம் பவுன் ரூ.36,520

சென்னையில் ஆபரணத் தங்கம் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.36,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.36,520

சென்னையில் ஆபரணத் தங்கம் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.36,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 14-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.36,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.33 உயா்ந்து, ரூ.4,565-ஆக இருந்தது. வெள்ளி ஒரு கிராமுக்கு 60 பைசா உயா்ந்து ரூ.53.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயா்ந்து, ரூ.53,500 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,565

1 பவுன் தங்கம் ..................... 36,520

1 கிராம் வெள்ளி .................. 53.50

1 கிலோ வெள்ளி ................. 53,500

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,532

1 பவுன் தங்கம் ..................... 36,256

1 கிராம் வெள்ளி .................. 52.90

1 கிலோ வெள்ளி ................. 52,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com