மேட்டூர் அணை உபரிநீர் பாசனத்திட்டப் பணிகள் ஆய்வு

மேட்டூர் அணையின் உபரிநீரை கொண்டு, சேலம் மாவட்டப் பகுதியில் உள்ள வறண்ட ஏரிகளை நிரப்புவதற்கான புதிய பாசனத் திட்டத்தினை இன்று ஆய்வு மேற்கொண்டனர். 
புதிய பாசனத் திட்டப்பணிகளை, ஒன்றியக்குழுத்தலைவர் கரட்டூர்மணி தலைமையிலான உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர்.
புதிய பாசனத் திட்டப்பணிகளை, ஒன்றியக்குழுத்தலைவர் கரட்டூர்மணி தலைமையிலான உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர்.


மேட்டூர் அணையின் உபரிநீரை கொண்டு, சேலம் மாவட்டப் பகுதியில் உள்ள வறண்ட ஏரிகளை நிரப்புவதற்கான புதிய பாசனத் திட்டத்தினை இன்று ஆய்வு மேற்கொண்டனர். 

கடந்த ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையினை திறந்துவைத்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, விவசாயிகள் பயன்பெறும் வகையில், மேட்டூர் உபரிநீர் பாசனத்திட்டப்பணியை விரைந்து முடித்திட சமந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

இதனை அடுத்து புதிய பாசனத்திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொங்கணாபுரம் ஒன்றியம் செங்காடு பகுதியில் நடைபெற்றுவரும் மேட்டூர் உபரிநீர் பாசனத்திட்ட பணிகளை, ஒன்றியக் குழுத்தலைவர் கரட்டூர்மணி தலைமையிலான உள்ளாட்சி பிரதிநிதிகள் வியாழன் அன்று ஆய்வுசெய்தனர். 

ஆய்வுகுறித்து ஒன்றியக்குழுத்தலைவர் கரட்டூர்மணி கூறுகையில்: 

மாண்புமிகு தமிழக முதல்வரின் சீறிய முயற்சியால் தொடங்கி நடைபெற்று வரும் இப்புதிய பாசனத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்ட பகுதியில்  உள்ள நூறு ஏரிகளை, மேட்டூர் அணையின் உபரிநீரினை கொண்டு நிரப்பிடும் வகையிலான புதிய பாசனத்திட்டத்திற்கான கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்புதிய பாசனத்திட்டம், விவசாயிகள் பயன்பாட்டிற்கு வரஉள்ளது.

இப்புதிய பாசனத்திட்டமானது, வெள்ளப்பெருக்கு காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தவிர்க்கும் வகையிலும், அவ்வாறு வெளியேற்றப்படும் உபரிநீரைக் கொண்டு, சேலம் மாவட்டத்தில்  வறண்ட நிலையில் உள்ள 100 ஏரிகளில் நிரப்புவதற்காக, 525 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு இப்புதிய புதிய பாசனத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

இப்புதிய பாசனத்திட்டப் பணிகளை, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி அன்று, எடப்பாடி அடுத்த இருப்பாளி ஏரி பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின்படி மேட்டூர் அருகில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் உள்ள நீர் உந்து நிலையத்தின் மூலம், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் குழாய்கள் மூலமாக, மேச்சேரி, நங்கவள்ளி, வனவாசி, தாரமங்கலம், ஓமலூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி உள்ளிட்ட சேலம் மாவட்ட பகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பிடும் வகையிலான கட்டுமானப்பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்பணியினை மேலும் துரிதப்படுத்தப்படுத்தும் விதமாக, தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, சமந்தப்பட்ட பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பணிகள் மேலும் துரிதமாக நடைபெற ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com