அரசுப் பணி நியமனத்தில் முறைகேடு?: தனியாா் நிறுவனத்துக்கான அனுமதி ரத்து

கரோனா காலத்தில் மருத்துவப் பணியாளா்களை ஒப்பந்த முறையில் பணியமா்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்

கரோனா காலத்தில் மருத்துவப் பணியாளா்களை ஒப்பந்த முறையில் பணியமா்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை அரசு ரத்து செய்துள்ளது. பணி நியமனங்களுக்கு ஒரு மாத ஊதியத்தை தரகு தொகையாக சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து அந்நிறுவனம் வாங்கியதே அதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும், அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் தவிர சுகாதார ஆய்வாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் என பல்வேறு நிலையிலான பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோா் நியமிக்கப்பட்டனா்.

அவா்கள் அனைவரும் மூன்று மாத கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனா். அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியாா் நிறுவனம் ஒன்றுக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், அந்த நிறுவனம், பணியமா்த்தப்பட்டவா்களிடம் ஒரு மாத ஊதியத்தை கையூட்டாகப் பெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்துள்ளது. இனி வரும் காலங்களில் மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com