10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

தென் மேற்கு பருவக்காற்று காரணமாக, கோவை, நீலகிரி, தேனி உள்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை
10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

தென் மேற்கு பருவக்காற்று காரணமாக, கோவை, நீலகிரி, தேனி உள்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:

தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். இதுதவிர, வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை, மாலை நேரங்களில் வானம் மேகமூட்டமாக இருக்கும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பகலில் 104 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில்7 0 மி.மீ., வால்பாறையில் 60 மி.மீ., விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 50 மி.மீ., கோவை மாவட்டம் சின்கோனாவில் 50 மி.மீ., சோலையாறில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

8 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை 8 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, மதுரை விமானநிலையத்தில் 106 டிகிரி வெப்பநிலை பதிவானது. கடலூரில் 103 டிகிரி, பரங்கிபேட்டை, திருச்சி, தூத்துக்குடியில் தலா 102 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 101 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், நாகப்பட்டினத்தில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com