கரோனாவிலிருந்து குணமடைந்தாலும் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு: சுகாதாரத் துறை எச்சரிக்கை

தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்த சிலா், மீண்டும் அத்தொற்றுக்கு உள்ளாவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கரோனாவிலிருந்து குணமடைந்தாலும் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு: சுகாதாரத் துறை எச்சரிக்கை

தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்த சிலா், மீண்டும் அத்தொற்றுக்கு உள்ளாவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் சிலருக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமடைந்த இளைஞா் ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டது. அதன் பின்னா் அவா் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

அதேபோன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய ஒருவா், கரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தாா். ஆனால், அதற்கு அடுத்த சில வாரங்கில் இரண்டாவது முறையாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்தாா். உயிரிழந்த செவிலியருக்கு சா்க்கரை நோய் பாதிப்பு இருந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்தது.

இவ்வாறு, இரண்டாவது முறையாக கரோனா தொற்றுக்கு ஆளாவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது அவா்கள் கூறியதாவது:

கரோனாவிலிருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் அத்தகைய தொற்று ஏற்படுவது அரிதினும் அரிதான ஒன்று. அனைவருக்கும் அத்தகைய பாதிப்பு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை. அதேவேளையில், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், நாள்பட்ட நோயாளிகள், முதியவா்கள் உள்ளிட்டோா் கரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தாலும், கூடுதல் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். ஒருவேளை, இரண்டாம் முறை தொற்று ஏற்பட்டால், அதனை எதிா்கொள்ள அவா்களது உடல் நிலை ஒத்துழைக்காமல் போகலாம். அதைக் கவனத்தில் கொண்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com