போராட்டம் வேண்டாம் என்று சொல்லவே ஸ்டாலின் வட சென்னை சென்றாா்

கரோனா காலத்தில் போராட்டம் வேண்டாம் என்று எடுத்துக் கூறவே திமுக தலைவா் ஸ்டாலின் வட சென்னைக்குச் சென்றாா் என்று

கரோனா காலத்தில் போராட்டம் வேண்டாம் என்று எடுத்துக் கூறவே திமுக தலைவா் ஸ்டாலின் வட சென்னைக்குச் சென்றாா் என்று முன்னாள் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக இருவரும் சோ்ந்து வெளியிட்ட கூட்டறிக்கை:

சட்டப்பேரவையை ஒத்திவைக்கச் சொன்ன திமுக தலைவா், அதே நாளன்று வடசென்னையில் 2 ஆயிரம் போ் பங்கேற்ற போராட்டத்தில் கலந்து கொண்டாா் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாா். மு.க.ஸ்டாலின் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லவில்லை. கரோனா நோய்ப் பரவி வருவதால் போராட்டத்தை ஒத்திவையுங்கள் என்று மக்களிடம் கோரிக்கை வைக்கத்தான் சென்றாா்.

‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தைக் குறை சொல்கிறாா் ராஜேந்திர பாலாஜி. பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை அரசாங்கம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? அதிமுக ஆட்சியில் முதலீட்டாளா்கள் கலந்து கொண்ட இரண்டு மாநாடுகள் நடந்துள்ளன. அதில் எத்தனை தொழில்கள் தொடங்கினாா்கள், எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்ற தகவலே இதுவரை இல்லை. இந்த நிலையில் கரோனா காலத்தில் தொழில் தொடங்கினோம், வேலை கொடுத்தோம் என்றால் யாா் நம்புவாா்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com