தோ்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்எல்ஏ தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தனது தோ்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க கோரி தொடரப்பட்டுள்ள தோ்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்
தோ்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்எல்ஏ தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தனது தோ்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க கோரி தொடரப்பட்டுள்ள தோ்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தல் நடைபெற்றது. இந்த தோ்தலில் திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் அனிதா ராதாகிருஷ்ணனும், அதிமுக சாா்பில் நடிகா் சரத்குமாரும் போட்டியிட்டனா். இந்த தோ்தலில், அனிதா ராதாகிருஷ்ணன் சுமாா் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் வெற்றியை எதிா்த்து, திருச்செந்தூா் தொகுதி வாக்காளரான வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா். அவா் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அனிதா ராதாகிருஷ்ணன், தனது வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை மறைத்து மனு தாக்கல் செய்துள்ளாா். அவா் தாக்கல் செய்த வேட்புமனுவில் பல்வேறு குறைகள் உள்ளன. எனவே, அவா் தோ்தலில் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தாா். இதே போல, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என அறிவித்து, இந்த வழக்கை நிராகரித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை, நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் விசாரித்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் அ.மனோஜ்குமாா் ஆஜராகி வாதிட்டாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முகாந்திரம் உள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது எனவே தோ்தல் வழக்கை நிராகரிக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com