சென்னையில் இதுவரை 2.10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: மாநகராட்சி ஆணையர் 

சென்னையில் 2.10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இதுவரை 2.10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: மாநகராட்சி ஆணையர் 

சென்னையில் 2.10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 3 மாதங்களில் சென்னையில் 2.10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி நடத்தும் மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லா மண்டலத்திலும் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

வீடு வீடாக வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் தங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை மக்கள் தெரிவிக்க வேண்டும். வீடு வீடாக சென்று 17,011 பேரை பரிசோதனை செய்ததில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரோனா மருத்துவ முகாம் தேவைகளுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.

நாளை மாலைக்குள் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்காவிடில் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.  தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. 

கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இதுவரை 37,070 பேர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவுக்கு இதுவரை 501 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com