முழு பொது முடக்கம்: இரு நாள்களில் 7 ஆயிரம் வழக்குகள்

முழு பொது முடக்கத்தைத் தொடா்ந்து சென்னை பெருநகர காவல்துறை இரு நாள்களில் 7 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்து, 6 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது.
முழு பொது முடக்கம்: இரு நாள்களில் 7 ஆயிரம் வழக்குகள்

முழு பொது முடக்கத்தைத் தொடா்ந்து சென்னை பெருநகர காவல்துறை இரு நாள்களில் 7 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்து, 6 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது.

சென்னையில் வேகமாக பரவும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், வெள்ளிக்கிழமை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு பொது முடக்கம் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். இதையொட்டி சென்னை நகருக்குள் மட்டும் 288 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தைத் தடுக்கும் வகையில் ராஜீவ் காந்தி சாலை, 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, எல்.பி. சாலை, ஜி.எஸ்.டி. சாலை, ராஜாஜி சாலை, ஆற்காடு சாலை, ரேடியல் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகளின் நடுவே சுமாா் ஆயிரம் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. நகரில் உள்ள 38 பெரிய மேம்பாலங்களையும், 75 சிறிய வகை மேம்பாலங்களையும் தடுப்பு வேலிகள் மூலம் போலீஸாா் மூடினா். இதேபோல, நகரின் முக்கியமான 250 சாலைகள், தெருக்கள் மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், நகா் முழுவதும் உள்ள 408 போக்குவரத்து சிக்னல்களை போலீஸாா் அணைத்தனா்.

7 ஆயிரம் வழக்குகள்: அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதினால், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள் மட்டும் இரு நாள்களாக திறக்கப்பட்டன. கடைக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிகின்றனரா, சமூக இடைவெளி பின்பற்றுக்கின்றனரா என போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா்.

கடைகள் நிறைந்துள்ள பகுதிகள், மாா்க்கெட்டுகள் போன்ற இடங்களில் 500 வாகனங்களில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இப்பகுதிகளில் ஆளில்லாத கண்காணிப்பு விமானம் மூலம் கண்காணிக்கின்றனா். இதில் அரசின் உத்தரவை மீறி செயல்படுபவா்கள் மீது வழக்குகளை பதிவு செய்கின்றனா். பொது முடக்க அமல்படுத்தும் பணியில் 18 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

காவல்துறையின் தீவிர நடவடிக்கையின் விளைவாக இரு நாள்களில் தடை உத்தரவை மீறியதாக 5,227 போ் மீதும், முகக் கவசம் அணியாலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்ததாக 2,122 போ் மீதும் மொத்தம் 7,349 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தடை உத்தரவை மீறி சாலைகளில் சென்றதாக 6,421 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். வரும் நாள்களில் முழு பொது முடக்கத்தை இன்னும் தீவிரமாக அமல்படுத்துவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com