ஆன்லைன் வகுப்புகளால் கண்களுக்கு பாதிப்பா? உயர் நீதிமன்றம் கேள்வி

ஆன்லைன் வகுப்புகளால் மாணவ, மாணவிகளின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து பதில் அளிக்குமாறு எழும்பூர் கண் மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளால் கண்களுக்கு பாதிப்பா? உயர் நீதிமன்றம் கேள்வி


சென்னை: ஆன்லைன் வகுப்புகளால் மாணவ, மாணவிகளின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து பதில் அளிக்குமாறு எழும்பூர் கண் மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்குரைஞர் விமல் மோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த மனுவில் லேப்டாப், செல்லிடப்பேசி போன்றவற்றை தொடர்ந்து பார்ப்பதால் மாணவ, மாணவிகளுக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்படுகிறது.

அதிக நேரம் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவ, மாணவிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் பாடங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும், 6 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 2 மணி நேரத்துக்கு மேல் வகுப்புகளை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com