தேனி, போடி, கம்பம் நகராட்சிகளில் கட்டுப்பாடு

​தேனி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்கு தேனி அல்லிநகரம், போடி, கம்பம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் கடைகள் மற்றும் போக்குவரத்துக்கு புதன்கிழமை மாலை 6 மணி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
​தேனி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்கு தேனி அல்லிநகரம், போடி, கம்பம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் கடைகள் மற்றும் போக்குவரத்துக்கு புதன்கிழமை மாலை 6 மணி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
​தேனி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்கு தேனி அல்லிநகரம், போடி, கம்பம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் கடைகள் மற்றும் போக்குவரத்துக்கு புதன்கிழமை மாலை 6 மணி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


தேனி மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பரவலைத் தடுப்பதற்கு தேனி அல்லிநகரம், போடி, கம்பம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் கடைகள் மற்றும் போக்குவரத்துக்கு புதன்கிழமை மாலை 6 மணி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 

தேனி, போடி, கம்பம் ஆகிய நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தேநீர் கடை, பேக்கரி, நகைக் கடை, ஜவுளிக் கடை, பெட்டிக் கடை, வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் பர்னிச்சர் கடை, தொலைக்காட்சி பெட்டி பழுதுநீக்கும் கடை, சாலையோர உணவுப் பொருள் விற்பனைக் கடை, காலணி விற்பனைக் கடை, செல்லிடபேசி கடை, எழுதுபொருள் விற்பனைக் கடை, அலங்காரப் பொருள் விற்பனைக் கடை ஆகியவை செயல்படுவதற்கு அனுமதி இல்லை.

அத்தியாவசியப் பணிகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட பயணிகளுடன் இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களை இயக்கலாம். தேனி மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாது. திண்டுக்கல், பழனி ஆகிய ஊர்களுக்கு ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில் 50 சதவீதம் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். வேளாண்மை சார்ந்த போக்குவரத்துக்கு தடையில்லை. அரசு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பணிக்குச் சென்று வர பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனை, மருந்துக் கடைகள், மருத்துவ பரிசோதனை நிலையம், ஆம்புலன்ஸ் ஆகியவை நிபந்தனைகளுக்கு உள்பட்டு வழக்கம் போல செயல்படலாம். அரசு அலுவலகங்கள் 33 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படும். வங்கிகளில் அத்தியாவசிய பணப் பரிவர்த்தனைக்கு மட்டும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் சேவைக்கு அனுமதி இல்லை. ஏ.டி.எம்.,மையம் வழக்கம் போல செயல்படும்.  

நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நியாய விலைக் கடை, இறைச்சிக் கடை செயல்பட அனுமதி இல்லை.

காய்கனிக் கடை, மளிகைக் கடை, பெட்ரோல் விற்பனை நிலையம், நடாமாடும் காய் கனி விற்பனை கடை ஆகியவை சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் செயல்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்கனி மற்றும் மளிகை பொருள்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்யலாம். 

பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வீடுகளில் இருந்து 1.5 கி.மீ.,தூரத்திற்குள் இருக்கும் கடைகளில் மட்டும் சென்று வாங்க வேண்டும்.

 உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் வழங்கவும், வீடு தேடிச் சென்று வழங்கவும் அனுமதிக்கப்படுகிறது. அம்மா உணவகம், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சமூக உணவுக் கூடங்கள் தொடர்ந்து செயல்படும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் ஆட்சியரிடம் அனுமதி பெற்று நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்யலாம். பால், குடிநீர், சமையல் எரிவாயு உருளை, பெட்ரோலியப் பொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com